news Breaking News
clock

பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்

பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்



திருவண்ணாமலை மாவட்டம், தெள்ளார் ஒன்றியம், வந்தவாசி அடுத்த கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கற்றல் திறன் செயல்பாட்டு பல்திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ப.சக்ரவர்த்தி (பொ) தலைமை தாங்கினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், கலாம் பவுண்டேசன் நிர்வாகி சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் துரைராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மா.கதிரொளி பங்கேற்று, மாணவர்களுக்கான ஒழுக்க நெறிகளை பற்றியும், கற்றல் திறன் விழிப்புணர்வு தகவல்களை வழங்கினார். மேலும் வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் ரேவதி, தினேஷ், சமூக ஆர்வலர் முகமது ஜியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் ஆசிரியர் செல்வக்குமார் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News