பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை


தாயின் கருவறையில் தொடங்கிய பயணம் கல்லறை வரை முடிவதில்லை 


அகவை ஐந்தில்

பாடம் படிக்க

பள்ளிப் பயணம் 

அனுபவம் தந்த 

அற்புதப் பயணம் 


 வருமானத்திற்கு 

வாலிப வசந்தங்களை இழந்து 

வேலை தேடிப் பயணம் 


குடும்பம் காக்க

 பாரம் தாங்கி

உழைப்பிற்காக

 உறங்காத பயணம் 


விஞ்ஞானம் தேடி

 விண்வெளிப் பயணம்


சுகம் தரும்

 சுற்றுலாப் பயணம் 


சொந்தம் நாடி

 உறவு முறைப் பயணம்


உடல் இளைக்க

 கால்நடைப் பயணம்


உற்சாகக் காற்று வாங்க 

கடற்கரைப் பயணம் 


நாளெல்லாம் சென்றாலும் 

அலுக்காத பயணம் 


உடல் போகா இடமெல்லாம் உள்ளம் போகும் பெரும் பயணம்


பயணமெல்லாம் 

பாடமாகும்

வாழ்வு சொல்லும் 

நூலாகும்


பயணங்கள் முடிவதில்லை 

அனுபவங்கள் 

குறைவதில்லை.



தமிழ்நிலா

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%