
ஆசிரியர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
விலை : ₹210
வெளியீடு: புஸ்தகா
தொடர்புக்கு : 7418555884
பட்டுக்கோட்டை பிரபாகர் சொன்னது போல் பத்திரிகைகளில் முதலில் நம்மை வாசிக்கத் தூண்டுவது அதில் இடம் பெற்ற "கேள்வி- பதில்" பகுதிதான்.
அந்த வகையில் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் எழுதியிருந்தாலும் அவற்றில் எப்போது படித்தாலும், சுவாரசியமாக இருக்கும் கேள்வி- பதில்களின் தொகுப்பு இது.
ஒரு சில கேள்வி- பதில்கள் இங்கே உங்கள் பார்வைக்கு :
அரசியல்வாதிகள் போல எழுத்தாளர்களும் கூட்டணி அமைத்தால்?
பல எழுத்தாளர்களின் கூட்டணியில்தானே ஒவ்வொரு பத்திரிகை அலுவலகமும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மை. இவர் சொன்னது போல் ஒரு இதழில் ஜி.ஏ.பிரபா, காஞ்சனா ஜெயதிலகர், ஆர்.சுமதி பர்வின்பானு உள்ளிட்ட 10 பெண் எழுத்தாளர்கள் சேர்ந்து "தாழங்குடை" என்ற கதை தொடராக வந்து தற்போது புத்தகமானது என் நினைவிற்கு வந்தது.
மனதை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்வது எப்படி?
வெரி சிம்பிள். செய்தித்தாள் படிக்காதீர்கள்.
ஒரு மாற்றத்திற்காக நீங்கள் கேள்வி கேளுங்களேன்.
சௌக்கியமா?
ராஜேஷ்குமார் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்திருப்பது பற்றி...?
பாதி வாழ்நாள் சாதனையாளர் விருது என்பதே சரியாய் இருக்கும். இன்னும் வாழ்நாள் இருக்கிறது. இன்னும் எழுதிக் குவிக்கவும் போகிறார்.
முதல் கதை சன்மானம் எவ்வளவு..? என்ன செய்தீர்கள்..?
1977 - விகடன் - முதல் கதை. அந்த மூன்று நாட்கள் - அந்தக் கதைக்கு காசோலையாக வந்த தொகை ₹150/-. (இன்று அதன் மதிப்பு ₹15,000/-.) .என் தந்தை வங்கிக்கு கூட்டிச் சென்று என் பெயரில் சேமிப்பு கணக்கு துவங்கி அதில்போடச் சொல்லித் தந்தார்.
உங்களின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும் என்ற ஒரு வங்கியின் விளம்பரம், என் பதின்ம வயதில் பார்த்தது, இப்பதிலைப் படித்ததும் ஞாபகத்துக்கு வந்தது.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?