ஜென் - ஸீ

ஜென் - ஸீ


ஆசிரியர்: அன்புத் தோழி ஜெயஸ்ரீ

வெளியீடு: அகநி 

விலை : ₹100

தொடர்புக்கு : 9444360421


அன்புத் தோழி ஜெயஸ்ரீ எழுதிய ஹைக்கூ கவிதைகள் அடங்கிய 4 வது தொகுப்பு இது.


இதில் எனக்கு பிடித்தவை உங்கள் பார்வைக்கு:


4 . ஆகாயத்தில் நீலமில்லை

என்றதும் சிரிக்கிறார் 

மீன்கொத்தி பார்க்காதவர்


SPB பாடிய வண்ணம் கொண்ட வெண்ணிலவே பாடலில் வரும் இடைவரிகள் "நீலத்தைப் பிரித்துவிட்டால் வானத்தில் ஏதுமில்லை" என் நினைவிற்கு வந்தது.


13. பல வண்ணத்தில் அந்தி 

கூடேகும் பறவைக்கெல்லாம்

ஒரே வண்ணம் கருப்பு



15. இலையில்லாக் கிளை

        விருந்தினரை. வரவேற்கும்

அலங்கார மான்கொம்பு 


மான் கொம்பு இலையில்லாக் கிளையாக காட்சி அளிக்கிறது.


97. பாகன் சொல் கேட்காமல்

         ஆசீர்வதிக்கும் தும்பிக்கை 

காசில்லாச் சிறுமிக்கும் 


தும்பிக்கை என்றாலே அது யானை என சொல்லாமலே புரியும் நம்பிக்கையின் வெளிப்பாடாக இதைப் பார்க்கிறேன்.


-ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%