news Breaking News
clock

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்


சென்னை, ஜன. 


தேர்தல் வாக்குறுதி 181–ஐ நிறைவேற்றி பணி நியமனம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.


தமிழகத்தில் சுமார் 12 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் முக்கியமாக கலை, இசை, தையல், உடற்கல்வி போன்ற சிறப்புப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களாவர். பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதியின் 181வது உறுதிமொழியில், பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாகக் கூறப்பட்டது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை எனக் கூறி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். பல நாட்கள் நீடித்த இந்தப் போராட்டத்தில் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட அறவழிப் போராட்டங்கள் நடைபெற்றன. தினசரி போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விரைவில் நல்ல செய்தி வரும் என உறுதியளித்தார். ஆனால் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல் 2025 டிசம்பர் மாதத்திலும் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்க்கட்சிகளான பாஜக, அதிமுக உள்ளிட்டவை போராட்டத்தை ஆதரித்து திமுக அரசை விமர்சித்தன. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News