news Breaking News
clock

பஞ்சபூத தலங்கள்

பஞ்சபூத தலங்கள்



நீர், நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகிய ஐந்தையும் பஞ்ச பூதங்கள் என்கிறோம். மனிதனின் உடல் இயக்கத்திற்கு பஞ்சபூதங்களின் இயக்கம் இன்றியமையாதது. பொதுவாக ஐந்து என்ற எண் சிவ பெருமானுடனும், மனிதர்களின் வாழ்க்கையுடனும் நெருங்கிய தொடர்புடையது.


பஞ்சபூதத் தலங்கள் என்பவை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களுக்கு உரிய சிவாலயங்களாகும். 

 இத்தலங்கள் அனைத்தும் தென்னிந்தியாவில் அமைந்துள்ளன. 


 *ஆகாயம்* 

சிதம்பரம் நடராசர் திருக்கோயில் 


 *நிலம்* 

காஞ்சிபுரம்--ஏகாம்பரேசுவரர் திருக்கோயில்


 *நீர்* 

திருவானைக்காவல்-- ஜம்புகேசுவரர் திருக்கோயில்


 *நெருப்பு* 

திருவண்ணாமலை--அண்ணமலையார் திருக்கோயில்


 *காற்று* 

திருக்காளத்தி--காளத்தீசுவரர் திருக்கோயில்


சிவ பெருமான் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அருளல் என்ற ஐந்தொழிலை இப்பஞ்சபூத தலங்களில் வீற்றிருந்து முறையே செய்கிறார் என்பது நம்பிக்கை.



சிவ.முத்து லட்சுமணன்

போச்சம்பள்ளி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News