news Breaking News
clock

நேபாளம்: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு

நேபாளம்: கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு



காத்மண்டு,


இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். அந்நாட்டின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அம்மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது


இந்நிலையில், நேபாளத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். கோஷி மாகாணத்தில் இலாம் மாவட்டத்தில் 7 பேர், மன்சிபங் மாவட்டத்தில் 5 பேர், கோசங் மாவட்டத்தில் 6 பேர் என மொத்தம் 18 பேர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.


நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதேவேளை, கனமழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் கவனமாக இருக்க அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News