news Breaking News
clock

நெல்லையில் 4.6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

நெல்லையில் 4.6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது


 

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பந்துறை விலக்கு பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிமுருகன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.


அப்போது அப்பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த மேலப்பாளையம், மேலநத்தம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சின்னராமலிங்கம் (வயது 32) என்பவரிடமிருந்து 1 கிலோ 290 கிராம் எடையுடைய புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.என்.பி. முதலாவது தெருவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணிக்கு சென்றனர்.


அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த முகமதுஇப்ராகிம் மகன் மொய்தீன்ரசாக்(19) என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட 3 கிலோ 375 கிராம் எடையுடைய புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News