என் மௌனத்தின் மொழி பெயர்ப்பாளன் அவன்!
என் மௌன மொழிகளின்
புரிதல் அவன்!
நான் காட்டும் மௌனத்தின் நம்பிக்கை அவன்!
பேசத் தெரியாதவள் நானில்லை!
என் மௌனமே
எனது பேரன்பையும்
எனது
குணநலன்களையும்
என்னவனுக்கு எடுத்துரைக்கும்போது-
மணிக்கணக்கில்
நான் வாதாடவோ-
எனது மன ஏக்கங்களை
அவனிடம் எடுத்துரைக்கவோ-
அதற்கான வாய்ப்பை
என்னவன் என்னிடம் என்றுமே அளித்ததில்லை!
ஏனென்றால்-
என் மாபெரும் புரிதலே
அவனான பொழுது
பின்பு-
அகங்காரமோ
ஆணவமோ
எனக்கெதற்கு?!
எத்தனையோ பேர்
எனக்கு எதுவுமே
எழுதத் தெரியாதென்று
கூறுவதுண்டு!
ஆம்-
அவர்கள் கூறுவதும்
உண்மைதான்!
என்னவனைத் தவிர
நான் இதுவரை
எதுவுமே
எழுதியதில்லையே!
அவனது
இதயப்பலகையில்-
எனது விழிகளால்
எழுதியதைத் தவிர
எனக்கு எதுவுமே
எழுதத் தெரியாதுதான்!
வானத்தில்
எண்ணற்ற நட்சத்திரக் கூட்டங்கள்
வைரம் போல்
மின்னி மின்னிக் கண் சிமிட்டலாம்!
ஒற்றை நிலவு நான்
என்னில் தேய்வதும் வளர்வதும் போல்
குறைகள் பல உண்டுதான்!
இருப்பினும்-
அவன் இதய மண்டலத்தில்
உலா வரும்
ஒற்றை நிலவுப் பேரரசி நான்தானே!
சில அன்னப்பறவைகளே புறாக்களே-
இதையு(இதய) மற்றவர்களுக்குத்
தூதாகக் கொண்டு
சேர்த்து விடுங்கள்!
இதையும் அவர்கள்-
பலவாறு விமர்சிக்கலாம்!
நம்மைப் படைத்த
இறைவனையே
தூற்றும் இவ்வுலகத்தில்
நான் மட்டும் எம்மாத்திரம்?!
கோவைக்கவி புவனா
கோயமுத்தூர்

கோவைக்கவி புவனா
கோயமுத்தூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?