news Breaking News
clock

நாடோடி மன்னன்

நாடோடி மன்னன்

‘’ படம் வளர்ந்தது. படத்துக்கான தயாரிப்பு செலவுகள் எகிறிக் கொண்டே இருந்தன. செலவுகளை சமாளிக்க ஏவி.மெய்யப்ப செட்டியாரிடம் கடன் கேட்க முடிவு செய்தார் வீரப்பன். அப்போது, ஏவி.எம். நிறுவனத்தின் ஆடிட்டர் சீனிவாசன், ‘‘கடன் தருவோம். ஆனால், எம்.ஜி.ஆர். கையெழுத்து போட வேண்டும்’’ என்று கூறிவிட்டார். கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடக் கூடாது, ஏதும் சிக்கல்கள் வந்தால் அவர் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் வீரப்பன்.


கடன் பெறுவதற்காக, படத்தின் இலங்கை ஏரியா விநியோக ஒப்பந்தத்தை ஈடாக காண்பித்திருந்தனர். அதில் எம்.ஜி.ஆர். கையெழுத்திட்டிருந்தார். ‘‘விநியோக உரிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும்போது கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆர். கையெழுத்து போடவேண்டும்’’ என்று ஆடிட்டரும் பிடிவாதமாக இருந்தார். நாட்கள் ஓடின. பணம் இல்லையென்றால் படப்பிடிப்பு நடத்த ஃபிலிம் வாங்க முடியாத நிலை.


திடீரென யோசனை தோன்ற மீண்டும் சீனிவாசனிடம் சென்றார் வீரப்பன். ‘‘இலங்கை விநியோக ஒப்பந்தம் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பெயரில் போடப்பட்டது. ஆனால், அந்நிறுவனம் பிறகு ‘எம்.ஜி.ஆர்.பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்று ஆனபிறகு, அதன் நிர்வாக இயக்குநர் நான்தான். என் பெயரில்தான் கடிதத் தொடர்புகள் நடக்கிறது. எனவே கடன் பத்திரத்தில் நான் கையெழுத்திட்டால் போதும்.’’ என்று கூறி ஆதாரங்களை காட்டினார் வீரப்பன்.


சட்டபூர்வமாக அவரது வாதத்தை மறுக்க முடியாத நிலையில், கடன் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. கடன் பத்திரத்தில் எம்.ஜி.ஆரை கையெழுத்து போடவிடாமல் கடன் பெற்றுவிட்டார் வீரப்பன்.


‘எம்.ஜி.ஆர். படங்கள் நகரங்களில் ஓடாது. கிராமங்களில்தான் ஓடும்’ என்ற தவறான கருத்து இருந்தது. இதை மாற்ற வேண்டுமானால் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்பட விநியோகத்திலும் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 1961-ல் எம்.ஜி.ஆர் நடித்த ‘திருடாதே’ படத்தின் சென்னை நகர விநியோக உரிமையை அந்நிறுவனம் பெற்றது. அப்போதெல்லாம், சென்னையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கு முதல்தர திரையரங்குகள் கிடைக்காது.


எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிர்வாகியாக இருந்த வீரப்பன் துணிந்து முடிவு எடுத்தார். அண்ணா சாலையில் பழைய படங்களை வெளியிட்டு வந்த பிளாசா, மற்றும் பாரத், மகாலட்சுமி ஆகிய பழைய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் திரையிடப்பட்டது. புதிய விளம்பர உத்திகளையும் வீரப்பன் வகுத்தார். மூன்று தியேட்டர்களிலும் படம் 100 நாட்கள் ஓடி அமோக வெற்றி பெற்றது. அதன் பிறகு எம்.ஜி.ஆர். படங்களை திரையிடுவதில் சென்னையின் முக்கிய தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினர். ‘திருடாதே’ படம் பட்டி தொட்டிகளிலும் ஓடி வசூலை வாரிக்குவித்தது. ராஜா ராணிக் கதைகளுக்குத்தான் எம்.ஜி.ஆர். பொருத்தமானவர் என்ற கருத்தையும் ‘திருடாதே’ தகர்த்தது.


எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் சத்யா மூவிஸ் பட நிறுவத்தை தொடங்கிய ஆர்.எம்.வீரப்பன், எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த முதல் வெற்றிப்படம் ‘தெய்வத்தாய்.’ அதிலிருந்து ‘இதயக்கனி’ வரை சத்யா மூவீஸின் 6 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.


எம்.ஜி.ஆரிடம் மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த வீரப்பன், அவருக்கே சம்பளம் கொடுப்பவராக மாறினார். சமயங்களில் வீரப்பனை எம்.ஜி.ஆர். ‘‘என்ன முதலாளி?’’ என்று ஜாலியாக அழைப்பது வழக்கம்.


முதல்வராகி தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்ட பிறகும், கடைசி வரை தனது ‘கணக்குப் பிள்ளை’யான ஆர்.எம். வீரப்பனுக்கு மாத சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பதை எம்.ஜி.ஆர். நிறுத்தவேயில்லை.


‘இதயக்கனி’ படத்துக்கு மற்ற எம்.ஜி.ஆர். படங்களுக்கு இல்லாத சிறப்பு உண்டு. ரஷ்யாவில் நடைபெற்ற தாஷ்கண்ட் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள ‘இதயக்கனி’ தேர்வு செய்யப்பட்டது. வெளிநாட்டு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எம்.ஜி.ஆர்.படம் என்ற பெருமையைப் பெற்றது ‘இதயக்கனி’.



*🌹✍️முத்து ஆனந்த்

வேலூர் - 632 002*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News