நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட்: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட்: சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு



புதுடெல்லி, ஜன.-


மத்திய பட்ஜெட் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது.


ஆண்டின் முதலாவது தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்துகிறார்.


அதைத்தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ந்தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை பா.ஜ.க. அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருந்தது.


ஆனால் திட்டமிட்டபடி 1-ந்தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையிலேயே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார்.


இதன் மூலம் 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்வது உறுதியாகி உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் ஆகும்.


முன்னாள் நிதி அமைச்சர் மொரார்ஜி தேசாய் 10 பட்ஜெட் தாக்கல் செய்ததே அதிகபட்ச சாதனையாக உள்ளது.


வருகிற 28-ந்தேதி தொடங்கும் பட்ஜெட் தொடர் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடக்கிறது. இதில் முதல் பகுதி அடுத்த மாதம் (பிப்ரவரி) 13-ந்தேதியுடன் முடிவுறுகிறது.


பின்னர் 2-ம் கட்ட பட்ஜெட் தொடர் மார்ச் 9-ந்தேதி தொடங்குகிறது.


மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பட்ஜெட் தொடர்பாக மாநில நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%