news Breaking News
clock

நரி வலம் போனாலும், இடம் போனாலும் திமுக கூட்டணியே வெற்றி பெறும் ,அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி

நரி வலம் போனாலும், இடம் போனாலும்  திமுக கூட்டணியே வெற்றி பெறும் ,அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி


* விருதுநகர், டிச.3-

நரி வலம் போனால் என்ன-இடம் போனால் என்ன. நமக்கு கவலையில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அமைக்கும் கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்று அமைச்சர் தங்கம்தென்னரசு பேசினார்.

விருதுநகர் அருகே உள்ள மல்லாக்கிணறில் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், நிதி அமைச்சருமான தங்கம்தென்னரசு பேசியதாவது -முன

தேர்தல் வருகிறது என்ற சாக்கில் தமிழ்நாட்டினுடைய அரசியல் சூழ்நிலைகள் மாறிக்கொண்டே உள்ளது. எந்த கூட்டணி யார்கிட்ட போனாலும் கவலைப்படுவதில்லை. நரி வலம் போனால் என்ன , இடம் போனால் என்ன. நமக்கு கவலையில்லை, நம்மைப் பொருத்தமட்டில் நம்முடைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் மீண்டும் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் ஆவார். அவர் அமைக்கின்ற கூட்டணி தான் வெற்றி கூட்டணி.

இதுவரை அவர் அமைத்த கூட்டணி தான் வெற்றி கூட்டணியாக இருந்திருக்கிறது. இனிமேலும் அவர் அமைக்கக்கூடிய கூட்டணி தான் தமிழ்நாட்டின் வெற்றி கூட்டணியாக அமையும். நம்மை எதிர்த்து எந்த புயல் வேண்டுமானாலும் வரலாம். அரசியல் புயல் வருகிறது என்றும் சொல்கிறார்கள், இன்னைக்கு ஒரு புயல் இங்கே வருகிறது என்று சொல்கிறார்கள், அந்தப் புயல் அங்கே வருகிறது என்று சொல்கிறார்கள். இந்தப் பக்கமாக நகர்கிறது, அந்தப் பக்கமாக நகர்கிறது என்றெல்லாம் சொல்கிறார்கள்.

எந்த புயலாக வந்தாலும் அந்த புயல்கள் எல்லாம் கடைசியாக புயல் புயல் என்றுதான் சொல்லுவார்களே ஒழிய கடைசியாக வலுவிழந்து வெறும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி நம்ம ஊர்ல கரையை கடக்காம ஆந்திரா, நெல்லூர்னு போய்தான் கரையை கடக்கும். தமிழ்நாட்டிற்குள் எந்த புயலும் வராது, அப்படியே எந்த புயலாக வருவதாக இருந்தாலும் நம்முடைய முதலமைச்சர் சொன்னபடி எந்தப் புயலையும் எதிர்கொள்ள, சமாளிப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது, நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி தயாராக இருக்கிறது. எனவே அந்த உறுதியோடு தேர்தலை எதிர்கொள்ள கூடிய வகையில் நாம் அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் .

இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News