நடைபாதையில் ஸ்கூட்டர் ஓட்டிய நபருக்கு வழிவிடாத கேரள மூதாட்டிக்கு பாராட்டு
Feb 17 2026
28
கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி (73). இவர் சாலையோரம் உள்ள நடைபாதையில் சென்று கொண்டிருந்தார். இவருக்கு எதிரே ஒருவர் நடைபாதையில் ஸ்கூட்டர் ஓட்டியபடி வந்தார். அவரை தடுத்து நிறுத்தினார் பிரபாவதி. அவர் தனது ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி பிரபாவதி செல்ல வழிவிட்டார். ஆனால், அவர் செல்லவில்லை. ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபரை தடுத்து நிறுத்தி, அவருக்கு சாலை விதிகளை மதித்து சாலையில் செல்ல அறிவுறுத்தினார்.
இதனால் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபர் வேறு வழியின்றி திரும்பி சாலையில் சென்றார். இந்த வீடியோ வைரலானது. கோழிக்கோடு மோட்டார் வாகனத்துறையும், பிரபாவதி செயலை பாராட்டி கவுரவித்துள்ளது.
இது குறித்து பிரபாவதி கூறுகையில் ”எனது பெற்றோர் கம்யூனிஸ்ட் கட்சியினர். நானும் இளம் வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினேன். பாரத சாரணர் இயக்கத்தில் இருந்து மற்றவர்களுக்கு வழி காட்டியுள்ளேன். விடுதிகளிலும் வார்டனாக பணியாற்றியுள்ளேன். எனக்கு விதிமீறல் பிடிக்காது. அதனால் ஸ்கூட்டர் ஓட்டி வந்த நபரை, சாலையில் செல்ல வற்புறுத்தினேன்” என்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?