🌌🌌
ஒத்த குடிசையிலே
ஒரு மனம்;
ஒத்த படகிலே
ஒரு மனம்;
இரட்டை மனசும்
தலை பிரட்டை எனத்
தவித்துக் கிடக்குதே!
ஆலமரத்து ஊசலென ஊசலாடி கிடக்குதே!
அவள் மனசு;
அவள் அத்தையின்
மனம் போல்
ஏங்கித் தவிக்குதே!
அவன் வருகைக்காக
துடித்துக் கிடக்குதே!
கண்ணில் வெள்ளமென
கண்ணீர் தேங்கிக் கிடக்குதே!
வெறும் கடலை வெறித்துப் பார்க்கையிலே;
வெற்றுப் படகு
ஒன்று கண்ணில் படுதே!

சசிகலா விஸ்வநாதன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%