தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை


விளக்கம் :


இளமையில் நல்லவற்றை கற்பது, மழைக் காலத்தில் நாற்று நடுவது போன்றதாகும். மாணவப் பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக் கொண்டவன், இளமைப் பருவத்தில் வெற்றிகளைக் குவிக்க முடியும். பருவம் தவறி விதைத்தால், பயனைப் பெற முடியாது. இளம் பருவத்தில் வேரூன்றும் பழக்கங்கள் வாழ்க்கை முழுவதும் தொடரும். தீய பழக்கங்களும் அப்படிப்பட்டவையே. அது ஆபத்தானது என்பதை வலியுறுத்தத்தான் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்றார்கள்.



காலம் பொன் போன்றது !

விளக்கம் :


உடல் வலிமையும், செல்வமும் மட்டும் மனிதனுக்கு வெற்றியைத் தேடித் தந்து விடாது. செய்யும் செயல்தான் வெற்றிக்கு அடிப்படை. காலம் கருதி செய்வதே வெற்றியை கொடுக்கும். ஏனெனில் காலத்தை தவறவிட்டால் மீண்டும் பெற முடியாது. எனவேதான் காலம் பொன் போன்றது என்றனர் நமது சான்றோர்கள்.



 



பருவத்தே பயிர்செய் !


விளக்கம் :


பருவம் என்பது குறிப்பிட்ட காலத்தைக் குறிக்கிறது. உரிய காலத்தில் எந்தச் செயலையும் செய்தல் வேண்டும். இல்லையென்றால், எதிர்பார்த்த பலன் கிடைக்காது. படிக்கிற பருவத்தில் செம்மையாக படிக்க வேண்டும். அதேபோல அந்தந்தப் பருவத்தில் பயிர்களை விதைத்து, மழை, காற்றில் வீணாகாமல் பருவத்தே அறுவடை செய்ய வேண்டும். இது போன்ற காலம் தவறாமல் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது.



 



சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன் 


நாம் அறிந்த விளக்கம் :


வைத்தியன் தன் முயற்சியை ஒருவனது மரணம் வரையில் கைவிடமட்டான். ஆனால் பஞ்சாங்கம் பார்த்துத் திதி சொல்லும் பிராமணனோ ஒருவன் செத்த பின்னரும் விடமாட்டான் என்பது இந்தப் பழமொழியின் நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :


வைத்தியரின் வருமானம் சாவுடன் முடிந்துவிடுகிறது. நீத்தார் கடன் செய்விக்கும் அந்தணனின் வருவாய் ஒவ்வொரு சாவுக்கும் இவன் வாழ்நாள் முழுவதும் வரும் என்பது சுட்டப்படுகிறது என்பதே இதன் உண்மையான விளக்கம் ஆகும்.



 


கொழுக்கட்டை தின்ற நாய்க்கு குறுணி மோர் குரு தட்சிணையா? 


நாம் அறிந்த விளக்கம் :


ஆண்டவனுக்குப் படைப்பதற்காக வைத்திருந்த கொழுக்கட்டையைக் கவ்விச் சென்ற நாய்க்கு, குறுணியில் மோரும் கொடுத்து குரு தட்சிணை செய்வார்களா என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.


விளக்கம் :


குறுணி என்பது எட்டுப்படி கொண்ட பழைய முகத்தல் அளவை. தண்டனைக்குரிய செயல் செய்த ஒருவனைப் பாராட்டுவது தகுமோ என்பது இதன் உண்மையான விளக்கம் ஆகும்.



 

Thanks and regards 

A s Govinda rajan 

17/5 Sri andal flats andavar nagar second Street Kodambakkam Chennai 

600024

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%