பனிப் பெய்த இரவில்
இருள் விலக
தேவன் பிறந்தார்
கருணையின் வடிவாக
அன்பின் உருவாக
அகிலம் காக்க
தேவன் பிறந்தார்
வானுலகம் வாழ்த்துச் சொல்ல
மண்ணுலகம் பூத்தூவ
இயேசுபிரான் எழிலாய்
அவதரித்தார்
பாவங்கள் கழிய
புண்ணியம் சேர
பூவுலகில் புத்தம் புது பாலனாய்
இயேசு பிறந்தார்
நல் மேய்ப்பனாகி
நமைக் காக்க
நல்லுலகில் நலமோடு
தேவன் பிறந்தான்
வேதத்தின் மறை பொருளை மற்றவர்க்கு எடுத்துரைக்க
மங்காப் புகழோடு
மண்ணில் பிறந்தார்
மானுட சூழ்ச்சியில்
மனிதம் வீழ
மரத்தின் புனிதத்தால்
சிலுவை சுமந்தது
காயத்திற்கு மருந்தாகக்
கருணை அமைய
ஆகாயம் அழுத கண்ணீரால்
பூமி எங்கும் உப்பு நீர் ஓடியது
தேவனின் புன்னகை முகத்தில்
வலியின் சுவடு மறைந்து
மானுடம் காக்கும்
பெருமை மிகுந்தது
கொண்ட அன்பினால்
பகைமை தோற்றது
பாவம் மறைந்து
பக்தி நிறைந்தது
ஆசிர்வாதம் வேண்டி ஆண்டவனை நாடுவதினும்
ஆன்மாவின் பலம் காக்க
இறைவனை நாடுவோம்.
††*****††*****††*****††*****††****††
தமிழ்நிலா
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?