தேசிய அளவில் ராமநாதபுரம் முதலிடம்: முதலமைச்சரிடம் கலெக்டர் வாழ்த்து பெற்றார்
ராமநாதபுரம், ஜன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னேற விழையும் மாவட்ட திட்டத்தின் கீழ் (Aspirational District Programme) சிறந்த முறையில் பணிகள் மேற்கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்தமைக்காக, நிதி ஆயோக் வழங்கிய 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான ஆணையை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் நாடு முழுவதும் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, கல்வி, சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட 6 முக்கியக் கருப்பொருட்களின் கீழ் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்துறைகளின் முன்னேற்றம் குறித்த அளவீடுகள் 'Champion of Change' என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு, காலாண்டிற்கு ஒருமுறை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நீர் வள மேலாண்மையில் சாதனை:
அந்த வகையில், 2025 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், ராமநாதபுரம் மாவட்டம் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் துறையில் தேசிய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், இதர 5 துறைகளிலும் சிறப்பான முன்னேற்றம் அடைந்ததன் அடிப்படையில், ஒட்டுமொத்த டெல்டா (Delta) தரவரிசைப் பட்டியலில் 112 மாவட்டங்களில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
இச்சாதனையைப் பாராட்டி நிதி ஆயோக் வழங்கிய 10 கோடி ரூபாய் நிதிக்கான அரசாணையை, முதலமைச்சரிடம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் சமர்ப்பித்தார். அப்போது மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இந்த ஊக்கத்தொகையை மாவட்டத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குப் பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?