தனுஷ்கோடியில் பக்தர்கள் வேன் மீது விழுந்த மரம்

தனுஷ்கோடியில் பக்தர்கள் வேன் மீது விழுந்த மரம்


ராமேஸ்வரம், ஜன.


ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் தனுஷ்கோடி சென்ற பக்தர்கள் வேன் மீது, மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தை அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். பின் சுற்றுலா தலமான தனுஷ்கோடிக்கு வாகனங்களில் சென்றனர். கேரளா பக்தர்கள் வேன் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறையின் டோல்கேட் சாவடி அருகே சென்றது. அப்போது திடீரென சவுக்கு மரம் முறிந்து வேன் மீது விழுந்தது.


ஆர்வலர்கள் கோரிக்கை:


இதில் பக்தர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். பிறகு வனஊழியர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.


தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் பழமையான சவுக்கு மரங்கள் உள்ளன. இவற்றில் பட்டுபோனவை உண்டு. காற்றின் வேகத்தில் அவை முறிந்து சாலையில் விழுகின்றன. எனவே சுற்றுலா பயணிகளுக்கு விபரீதம் ஏற்படும் முன், பழமையான மரங்களை அகற்றிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%