எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் தவறவிட்ட ரூ.3 லட்சம் நகைகள்: உரியவர்களிடம் ஒப்படைத்த திருச்சி ரயில்வே போலீசார்
Jan 21 2026
11
திருச்சி, ஜன. –
எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தவறவிட்ட 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை உரியவர்களிடம் திருச்சி ரயில்வே போலீசார் ஒப்படைத்தார்கள்.
எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் வண்டியில் நேற்று பயணம் செய்து வந்த, கரூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கருப்பன் என்பவர் மகன் வேணுகோபால் (வயது 67) என்பவர், தனது மனைவி கமலாவுடன் சாலக்குடியில் இருந்து பொதுப்பெட்டியில் கரூருக்கு பயணம் செய்தார். தன்னுடன் எடுத்து வந்த டிராவல் பேக்கை எடுக்காமல் மறதியாக விட்டுவிட்டார். பின்னர் கரூர் ரயில்வே காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் காவலர் பெரியக்காள் என்பவரிடம் வாய்மொழி புகாராக கூறினார்.
மேற்படி காவலர் அவ்வண்டியில் கிரைம் பணியில் இருந்த தலைமை காவலர் சேகர் என்பவரிடம் மேற்படி சம்பவத்தை எடுத்துக் கூற, தலைமை காவலர் முன்புறம் உள்ள பொதுப்பெட்டியை சோதனை செய்து, தவறவிட்ட டிராவல் பேக்கை கண்டுபிடித்தார். மேலும், அதில் இருந்த சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை பெட்டியை தவறவிட்ட வேணுகோபால் மற்றும் அவரது மனைவி கமலா ஆகியோரிடம் திருச்சி ரயில்வே காவல் நிலையம் மூலம் இன்று ஒப்படைக்கப்பட்டது. தவறவிட்ட நகைகளை திரும்ப பெற்ற தம்பதியினர் காவலர்களுக்கு நன்றி கூறினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?