news Breaking News
clock

தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி நிலம் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு

தெலங்கானா மாநில பெண்ணுக்குச் சொந்தமான ரூ.3 கோடி நிலம் ஆள்மாறாட்டம் மூலம் அபகரிப்பு

ஆள் மாறாட்டம் மூலம் நிலத்தை அபகரித்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.

சென்னை: தெலங்​கானா மாநில பெண்​ணுக்​குச் சொந்​த​மான ரூ.3 கோடி மதிப்​புள்ள நிலத்தை ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​த​தாக 5 பேர் கும்​பலை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். தெலங்​கானா மாநிலம், ஐதரா​பாத்​தில் உள்ள ஹரிதவனம் பகு​தி​யில் வசித்து வருபவர் விஜய​சா​முண்​டீஸ்​வரி (59).


இவருக்கு சொந்​த​மான ரூ.3 கோடி மதிப்​புள்ள காலிமனை வேளச்​சேரி விஜயா நகரில் இருந்​தது. இதை சிலர் போலி ஆவணம் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​து​விட்​டனர். இதுகுறித்து விஜய​சா​முண்​டீஸ்​வரி சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் கடந்த ஜூன் 2-ம் தேதி புகார் தெரி​வித்​தார்.


இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். அதன்​படி, அப்​பிரி​வில் உள்ள நில மோசடி புல​னாய்​வுப் பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர்.


இதில் முகப்​பேர் மேற்கு செந்​தமிழ் நகரைச் சேர்ந்த யசோதா (59), அதே பகுதி பள்​ளிக்​கூட தெரு​வைச் சேர்ந்த பழனி (43), அயப்பாக்கம், பவானி நகரைச் சேர்ந்த வனிதா (40), முகப்​பேர் மேற்கு விஜிபி நகரைச் சேர்ந்த மேக​நாதன் என்ற குட்டி (49) ஆகிய 4 பேரும் சேர்ந்து விஜய சாமுண்​டீஸ்​வரிக்கு சொந்​த​மான காலி மனையை ஆள் மாறாட்​டம் மற்​றும் போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​தது தெரிய​வந்​தது.


இதையடுத்​து, இவர்​கள் 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர். மேலும் மோசடி செய்து அபகரித்த சொத்தை விற்க உதவி​யாக இருந்​த​தாக அயப்​பாக்​கத்​தைச் சேர்ந்த அருணாச்​சலம் (42) என்​பவரும் கைது செய்​யப்​பட்​டார். கைது செய்​யப்​பட்ட 5 பேரும் நீதிமன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். கைதான மேக​நாதன் நொளம்​பூர் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் உள்​ளார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News