தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணாநகர் 3வது தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் லட்சுமணன் (வயது 35), கார் டிரைவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டாராம். லட்சுமணன் நேற்று வேலைக்கு சென்றவர் இரவு வீட்டுக்கு வந்தாராம். அப்போது மது போதையில் வந்த அவர் தனது அறையில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முகிலரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரது உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லட்சுமணன் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?