news Breaking News
clock

திருவள்ளூர் ரயில் விபத்து: 4 பாதைகளிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை

திருவள்ளூர் ரயில் விபத்து: 4 பாதைகளிலும் இயல்பு நிலைக்குத் திரும்பிய ரயில் சேவை

திருவள்ளூர்:

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் 4 ரயில் பாதைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இதனால், ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.


சென்னை துறைமுகத்தில் இருந்து, 50 டேங்கர்களில் பெட்ரோல், டீசல் நிரப்பிக் கொண்டு நேற்று முன் தினம் அதிகாலை சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 18 டேங்கர்கள் எரிந்து நாசமாயின.


இதனால், சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே ரயில்களின் சேவை நேற்று முன் தினம் நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொடர்ந்து, சேதமடைந்த ரயில் பாதைகள் மற்றும் மேல்நிலை மின் கம்பங்கள், மின் கம்பிகள் ஆகியவற்றை சீரமைக்கும் பணி தொடங்கியது.


4-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி முடிவுக்கு வந்து, நேற்று முன் தினம் இரவு விரைவு ரயில் சேவை தொடங்கியது. 3-வது ரயில் பாதையில் சீரமைப்பு பணி நேற்று காலை நிறைவு பெற்று, காலை 7 மணி முதல் புறநகர் மின்சார ரயில்கள் சேவை தொடங்கியது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News