*வான்புகழ் கொண்ட வள்ளுவன்.!*
*****************************
வள்ளுவரைக் கொண்டாடுவோம்.!நமக்கு வாழும்நெறி தந்ததனாலே.. தெள்ளுத்தமிழ் மறையோதுவோம்..நம்
தெய்வப் புலவர் அருளுவதாலே.!
முப்பாலில் முத்தமிழர் நெறிவளர்த்தவர்! முயற்சியினால் வென்றுவாழ வழிவகுத்தவர்.! தப்பாமல் நேர்வழிக்குத் தடம் வகுத்தவர்! தரணியிலே மாந்ணர்வாழ தவமிருந்தவர்!
*********
அறம் பொருள் இன்பம் என்ற அன்புநெறியிலே
அறிவு என்ற கோவிலுக்கு வாசல் திறந்திட.. நிறம் சாதி மதம் கடந்து மனிதர் ஏகிட.. நிறைவானப் பொதுமறையை அன்றுதந்தவர்.!
பரம்பொருளே மனிதர் என்று சான்று பகர்ந்தவர்! பசித்தவர்க்காய் பரமனிடம் கேள்விக் கேட்டவர்.! மறைபொருளை உலகத்திற்காய் குறளில் வைத்தவர்! மனித நேயப் பாவலரை வாழ்த்தி வணங்குவோம்!
*********
பிறப்பொக்கும் என்று புரட்சி செய்தவர் யாரோ? பேதமற்ற சமுதாயம் விழைந்தவர் யாரோ? இரக்கத்தோடு மானுடத்தை இணைத்தவர் யாரோ? இல்லறத்தில் துறவறத்தை உரைத்தவர் யாரோ?
அறம் பொருள் இன்பம் தந்த அறிவொளி யாரோ? அன்னைத் தமிழ் நாடு கண்ட பாவலர் யாரோ? சிரம் தாழ்த்தி திருவள்ளுவர் குறளைப் போற்றியே.. செந்நா புலவரை நாம் வாழ்த்தி வணங்குவோம்!
பொற்கிழிப் பாவலர்.
*வே.கல்யாண்குமார்.
பெங்களூரூ.*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?