திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் உறுப்பினராக களியக்காவிளை A. ஹலீல் றகுமான் இணைந்தார்

60 ஆண்டுகளை கடந்து கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் தமிழ் சங்கம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் உரிமையை பாதுகாப்பதிலும் தமிழர் பண்பாட்டை மேம்படுத்துவதிலும் சங்கத்தின் பணி மிகவும் மகத்தானது. மேலப்பாளையம் ரஹ்மானியா மேல்நிலைப் பள்ளியின் மேனாள் முதுகலை பொருளியல் ஆசிரியர் களியக்காவிளை A. ஹலீல் றகுமான் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார். உறுப்பினராக இணைந்த A. ஹலீல் றகுமானுக்கு திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் தலைவர் மு முத்துராமன் சங்கத்தின் வைர விழா மலரையும், கேரளத் தமிழ் இலக்கிய மாத இதழையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?