
செய்யாறு ஜூலை. 23,
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம் ,எறும்பூர் அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா முன்னிட்டு அம்பாளுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது.
பின்னர் கூழ் வார்க்கும் வைபவம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து பம்பை, உடுக்கையுடன் பூங்கரகம் ஊர்வலம் நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ மகா சக்தி மாரியம்மன் உற்சவராக சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது. வான வேடிக்கை நடந்த பின், இரவு நாடகம் நடைபெற்றது.
திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர் .விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%