தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி



    " சுதந்திர தியாகிகள்

      செய்த உயிர்

      தியாகம் பொருள்

      தியாகம் வாழ்க்கை

      தியாகம் இதில்

      மலர்ந்தது தேசியக்கொடி ..."


     கொடியினை காக்க

     தன் உயிர்

     ஈந்தான் குமரன் .... "


     மூவர்ணக்கொடி

     பட்டொளி வீசி 

     பறக்குது பாரீர்

     அதை தாழ்ந்து

     பணிந்து வணங்கிட

     வாரீர் .... "


     மேல்பக்கம் காவி

     தைரியம் தியாகம்

     பற்றி சொல்லும் ....."


     நடுபாகம் வெள்ளை

     அமைதி தூய்மை

     உண்மையை

     பற்றிச் சொல்லும் .... "


    அடிபாகம் பச்சை

    பசுமை வளர்ச்சி

    வளமை பற்றி

    எடுத்துச் சொல்லும் .... "


    வெள்ளை பாகத்தின்

    நடுவில் அசோகச்சக்கரம்

    நீதியை முன்னேற்றத்தை

    பற்றிச் சொல்லும் ...."


  

     அசோகச்சக்கரம்

     நீல நிறத்தில்

     இருக்கும் இருபத்தி நான்கு

     ஆரம் கொண்டது

     சுதந்திரம் மற்றும்

     இறையாண்மையை

     குறிக்கிறது ...."


      குடியரசு நாளில்

      தேசியக் கொடியை

      குடியரசு தலைவரும்

      சுதந்திர தினத்தில்

      பிரதமரும் ஏற்றி

      வைப்பார்கள் ..."


      தரையில் கொடி

      படாமல் ஏற்றுவது

      மரபு ..."

 

       கம்பத்தின் உச்சியில்

       பறக்கும் தேசியக்கொடி தேசியத்

       தலைவர்கள் இறந்தால்

       அரைக் கம்பத்தில்

       கொடி பறக்கும் ...."


       தாயின் மணிக்கொடியை

       வணங்கி மகிழ்வோம் ..."


   - சீர்காழி. ஆர். சீதாராமன்.

     9842371679.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%