தமிழ்நாடு முழுவதும் 3வது நாளாக செவிலியர்கள் போராட்டம்
Dec 21 2025
88
பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்த செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் செவிலியர்கள் 3வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
திமுக அளித்த வாக்குறுதிப்படி, பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொகுப்பூதிய செவிலியர்கள் நேற்று முன்தினம் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 750-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பங்கேற்றனர் அதைத்தொடர்ந்து, மாலையில் செவிலியர்களைக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போலீஸார் கிளாம்பாக்கத்தில் இறக்கி விட்டனர். இதையடுத்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் செவிலியர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அவர்களைக் கைது செய்து, ஊரப்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் போலீஸார் அடைத்தனர்.
அங்கும் செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். செவிலியர்கள் கைது செய்யப்பட்டதைக்கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் நேற்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று 3வது நாளாக தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நர்சுகள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று 2-வது நாளாக அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?