news Breaking News
clock

தமிழ்நாட்டில் பரவுவது வைரஸ் தொற்று இல்லை சுகாதாரத் துறை விளக்கம்

தமிழ்நாட்டில் பரவுவது  வைரஸ் தொற்று இல்லை சுகாதாரத் துறை விளக்கம்

சென்னை:

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவி வருவது வழக்கமான ‘இன்ஃப்ளூயன்சா ஏ’ வகை வைரஸ் காய்ச்சல் மட்டுமே என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் மழைப் பாதிப்பு போன்ற காரணங்களால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரித் துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை களில் சளி, இருமல், தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறி களுடன் சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கு அனுப்பி காய்ச்சலின் தன்மையை கண்டறியுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மாதிரிகள் பரிசோதனை முடிவில் புதிய வகை வைரஸ் தொற்று காணப்பட்டால் அதற்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50 சதவிகித நோயாளிகளுக்கு இன்ஃப்ளூயன்சா ஏ வகை பாதிப்பு மட்டுமே உள்ளது என்பது ஆய்வுகளில் தெரியவந்து உள்ளது. ஆண்டின் இறுதி மூன்று மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இரு மடங்கு அதிகரித்தது வழக்கமான ஒன்று என தெரிவித்துள்ள சுகாதாரத்துறை வீட்டைச் சுற்றி யுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளு மாறு அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்க ளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், திருமணம், கோவில் நிகழ்ச்சிகள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலை யங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News