news Breaking News
clock

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு  ஒன்றிய அரசு ரூ.127 கோடி விடுவிப்பு

சென்னை, செப்.18 -


தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15ஆவது நிதிக்குழு மானியமாக ரூ.127.58 கோடியை ஒன்றிய அரசு வியாழக் கிழமை (செப்.18) விடுவித்து உள்ளது. ஒன்றிய அரசு, நடப்பு (2025-26) நிதியாண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 15 ஆவது நிதிக் குழுவின் மானியத்தை விடு வித்திருக்கிறது. இதில், தமிழகத் துக்கு உள்ளாட்சி அமைப்பு களுக்கான மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.586 கோடியை விடுவித்துள்ளது. இந்த நிதி 2,901 தகுதியுடைய கிராமப் பஞ்சாயத்துகள், 74 தகுதியுடைய பஞ்சாயத்து வட்டா ரப் பகுதிகள், 9 தகுதியுடைய மாவட்ட பஞ்சாயத்துகள் ஆகிய வற்றை உள்ளடக்கியதாகும். பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீர்வள அமைச்சகங்களின் குடிநீர் மற்றும் துப்புரவு துறை மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்காக 15ஆவது நிதிக் குழுவின் மானியங்களை விடுவிக்க ஒன்றிய அரசு மாநிலங் களுக்கு பரிந்துரை செய்கிறது. அதன் பின்னர், நிதியமைச்சகத் தின் மூலம் நிதி விடுவிக்கப் படுகிறது. ஒதுக்கீடு செய்யப்பட்ட மானி யங்கள், ஒரு நிதியாண்டில் 2 தவ ணைகளாக விடுவிக்க பரிந்துரைக் கப்பட்டு விடுவிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்களை, ஊதியம் மற்றும் இதர செலவுகள் தவிர, அரசியல் சாசனத்தின் 11ஆவது பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்தப் பகுதிகளின் தேவைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளும் பயன்படுத்தும். குறிப்பிட்ட நோக்கங்களுக் கான உள்ளாட்சி அமைப்புக்கான மானியங்கள், தூய்மைக்கான அடிப்படை சேவைகள், திறந்த வெளிக் கழிப்பிடம் இல்லாத நிலை யைப் பராமரித்தல் ஆகியவற்றுக் காக பயன்படுத்தப்படும். இதில் வீட்டுக் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளது. குறிப்பாக மனிதக் கழிவுகள் மற்றும் மலக் கசடுகளை அகற்று தல், குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக இந்த மானியங் களை பயன்படுத்தலாம் என ஒன்றிய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News