*...!*
அறூசீர் மண்டிலம்.
தன்னைத் தானே
காத்திடுக
தக்க சினமே
வாராமல்!
முன்னைப் போல
வாழாமல்
மேன்மைக் குணமாய்
வாழ்ந்திடுக!
என்றும் சினமே
வேண்டாமே
ஏற்ற நல்ல
குணம்வேண்டும்!
பொன்றாப் புகழாய்
உலகினிலே
போற்று மாறு
வாழ்ந்திடுக!
சினமே வாரா
நிலைகண்டு
சீர்மை யாக
வாழ்ந்திடுக!
கனிவே கண்டு
சூழ்ந்திடுக
கருணை யோடு
சேர்ந்திடுக!
சினமே இன்றி
வாழ்ந்திடுக
சிறப்பில் என்றும்
சூழ்ந்திடுக!
இனியும் சினமே
வேண்டாமே
இனிமைக் குணமே
காணட்டும்!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%