முசிறி அருகே முதுமக்கள் தாழி கண்டெடுப்பு: கிடைத்த பொருள்கள் கருவூலத்தில் ஒப்படைப்பு
Jan 21 2026
12
திருச்சி, ஜன.–
முசிறி அருகே கண்டெடு க்கப்பட்ட முதுமக்கள் தாழியில் கிடைத்த பொருள்களைச் சேகரித்து, முசிறி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை ப்பள்ளி மைதானத்தில் இளை ஞர்கள் விளை யாடிக் கொண்டிருந்தபோது, பெரிய பானை வடிவ பொருள் மண்ணுக்குள் புதைந்து இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்தப் பானையை வெளியே எடுத்துப் பார்த்துள்ளனர். அதற்குள் மண் விளக்கு, சிறிய எலும்புத் துண்டுகள், சிறிய மண் பானை உள்ளிட்ட பொருள்கள் இருந்தன.
இதுகுறித்து தகவலறிந்த முசிறி வருவாய் ஆய்வாளர் ஜிஜி, கிராம நிர்வாக அலுவலர் பிரியா மற்றும் முசிறி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு அங்கு கிடைத்த பொருள்களைச் சேகரித்து, முசிறி சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வெள்ளலூரில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்த நாள் விழா
மேலூர், ஜன.19–
முல்லைப் பெரியாறு அணையை கட்டிய மாமனிதர் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் 185 வது பிறந்தநாளை முன்னிட்,டு பென்னிகுவிக் பொங்கல் விழா 7 ஆம் ஆண்டு வெள்ளலூர் விலக்கில் கொண்டாடப்பட்டது.
பென்னிகுவிக் பொங்கல் விழாவை மக்கள் சேவை மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். வெள்ளலூர் நாட்டு விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் சேவை மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெள்ளலூர் நாட்டு பகுதியில் மனிதகுல மாணிக்கம், விவசாயிகளின் விடிவெள்ளி, நீர் மேலாண்மையின் தந்தை பென்னிகுவிக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்து போற்றப்பட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
----------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?