தனிமை

தனிமை


தனக்குள்

மெளனம் நிரப்பிக்

கொண்டிருக்கும்

இனிய சங்கீதம்

தனிமை.....

உன்னை

உனக்கு

முழுமையாய்

உணர வைக்கும்

அரிய தருணம்

தனிமை...

விலகி நீ

வந்த பின்னும்

அடுத்த சந்திப்பிற்காக

அங்கேயே காத்திருக்கும்

ஆறுதல் தரும்

தோழமை தனிமை!

மனம் விட்டு பேசும்

சுகம்

இதமானது!

உன்னை நீயே

செதுக்கிக் கொள்ள

வைக்கும்

வழிகாட்டி தனிமை...

தனிமை

உன்

வருத்தங்களின்

வடிகால்...

தனிமை

உனக்கான

தீர்வுகளின் திறவுகோல்!


சத்யா கீர்த்திவாசன் 

 சென்னை 



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%