ஒரு சாதாரண தகவலை ஜோக்காக மாற்றும் விதம்...
அப்பா பையனிடம் கேட்கிறார்:
" என்னடா அஞ்சு வருஷமா படம் டைரக்ட் பண்ணப் போறேன்னு சொல்லிட்டே இருக்கே... எப்படா பண்ணப் போறே...!? "
பையன் பதில் சொல்றான்...
" அப்பா... இப்ப கூட ஒரு படம் டைரக்ட் பண்ணி முடிக்கப் போறேன்... அதுவும் கிளைமேக்ஸை அரக்கோணத்துலேயும், கும்பகோணத்துலேயும் எடுக்கப் போறேன்..! "
இந்த உரையாடலில்
எந்த ஜோக்கும் கிடையாது...
இதை ஜோக்காக மாற்றலாமா...?
அப்பா பையனிடம் கேக்கற கேள்வியில் மாற்றமில்லை...
பையன் பதிலில் ஒரு மாற்றம்...
" அப்பா... இப்பக்கூட ஒரு படம் டைரக்ட் பண்ணி முடிக்கப் போறேன்... அதுவும் கிளைமேக்ஸை ரெண்டு கோணத்துல எடுத்துட்டுருக்கேன்...! "
அப்பா ஆச்சரியத்துடன் கேட்கிறார்...
" அப்படியா...!? "
பையன் பதிலளிக்கிறான்...
" ஆமா... ஒண்ணு அரக்கோணத்துல... இன்னொண்ணு கும்பகோணத்துல...! "
இரண்டு உரையாடல்களிலும் சொல்ல வந்த தகவல் ஒன்றுதான் என்றாலும் இரண்டாவது உரையாடலில் சிரிப்பு வருகிறதல்லவா...!!!
-------------------------------------------
அடுத்த உரையாடல்...
மனைவி ( கணவனிடம்):
" ஏன் ரொம்ப சோகமா இருக்கறீங்க...!? "
கணவன் அதன் காரணத்தை சாதாரண தகவலாக கூறுதல்:
" டிக்கெட் எடுக்க கியூவில் நிற்கும் போது எவனோ பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சிட்டான்...!! "
இந்த தகவலை சற்று மாற்றி சிரிப்பு வரும்படிக் கூறுதல்...
" டிக்கெட் எடுக்க வரிசையில நிக்கறப்ப எவனோ கை வரிசைய காட்டிட்டான்டி... என்னோட பர்ஸ் போச்சு...!!! "
இதிலும் தகவல் ஒன்றுதான்...ஆனால் இரண்டாவது உரையாடல்தான் சிரிப்பை வரவழைக்கும்.
இது போல சிந்தித்தால் அனைவருமே ஜோக்குகளை உருவாக்கி மகிழலாம்... மகிழ வைக்கலாம்...!!!

-லட்சுமி ஆவுடைநாயகம்,
மடிப்பாக்கம்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?