news Breaking News
clock

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு

ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்: போட்டி அட்டவணை வெளியீடு



இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்கா உடன் மோதுகிறது.

துபாய்,


16-வது ஐ.சி.சி. ஜூனியர் ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கான அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது.


இதில் பங்கேற்றுள்ள அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவுகளில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு தகுதி பெறும்.


இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கை அணிகளும், ‘பி’பிரிவில் இந்தியா, வங்காளாதேசம், அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், ‘சி’ பிரிவில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும், ‘டி’ பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தான்சானியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளும் இடம்பெற்றுள்ளன.


இதில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை சாம்பியனான இந்திய அணி ஜன.15-ந்தேதி புலவாயோவில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவுடன் மோதுகிறது. 17-ந் தேதி வங்காளதேசத்தையும், 24-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.


இறுதிப்போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News