news Breaking News
clock

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல் - 3 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக

ஜம்மு காஷ்மீர் மாநிலங்களவைத் தேர்தல் - 3 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக



புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 4 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியிட 3 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் மாநில பாஜக தலைவர் சத்பால் சர்மா, குலாம் முகமது மிர், ராகேஷ் மகாஜன் ஆகிய வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது.


ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கட்சிகளின் பலம் அடிப்படையில், ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி மூன்று இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது.


எனினும், தேர்தலின்போது மற்ற கட்சிகளின் எம்எல்ஏக்களை ஈர்க்கும் நடவடிக்கைகளை பாஜக தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாகவே, மூன்று வேட்பாளர்களை அது களத்தில் இறக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி மூன்று வேட்பாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது. நான்காவது இடத்துக்கு காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அக்கட்சி தெரிவித்திருந்தது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News