ஜம்மு: ஜம்முவில் உள்ள என்ஐஏ அலுவலகம் அருகே சீன துப்பாக்கி தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பாதுகாப்புபடையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்முவில் பயங்கரவாதிகளின்அச்சுறுத்தலை அடுத்து உச்சகட்ட எச்சரிக்கை நிலவிவருகிறது.இந்நிலையில் ஜம்முவில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அருகே சீனா முத்திரை கொண்ட துப்பாக்கி மற்றும் அதனுடன் பயன்படுத்தப்படும் தொலை நோக்கிஒன்றையும் ஜம்மு போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்துள்ளனர்.
ஜம்முவில் போலீஸ் தலைமையகம், என்ஐஏ அலுவலகம், சிஆர்பிஎப், மற்றும் சீமா சுரக்ஷா பல் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் அருகருகே அமைந்துள்ளன.நான்கு முக்கிய பாதுகாப்புமையங்களுக்கு அருகிலேயே துப்பாக்கிதொலைநோக்கியை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜம்மு போலீஸ் உயர் அதிகாரிகள் இது குறித்த மேலும் விவரங்களைதெரிவிக்க மறுத்தனர். முன்னதாக மாநிலத்தில் நிலவும் மூடுபனியை பயன்படுத்திபயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சியை நடத்த கூடும் எனஉளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?