சௌந்தர்யபுரம் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு
**
வந்தவாசி , டிச 25:.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சௌந்தர்யபுரம் கிராமத்தில் உள்ள
ஸ்ரீ அம்புஜவல்லி நாயக சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருக்கோயிலில் மார்கழி மாதம் முன்னிட்டு சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை விஷேச திருமஞ்சனம் அதனைத் தொடர்ந்து பாதுகா சகஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது. இந்த வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி வைகுந்த ஏகாதசி வைபவத்தில் காலை 8.30 மணியளவில் பரமபத வாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்ட உள்ளது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?