சென்னை: சைபர் குற்றங்கள் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள், துாதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து, மாநில சைபர் குற்றப்பிரிவு தலைமையக டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக பண மோசடி செய்யும், சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக, 1930 என்ற எண்ணில், புகார் அளிக்கலாம். இந்த எண்ணை மாநிலம் முழுதும் உள்ள நபர்களுக்கு தெரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். மேலும், 30 வகையான சைபர் குற்றங்கள் குறித்து, மக்களுக்கு எளிதாக புரியும்படி, கதை வடிவிலான புத்தகம் வெளியிட்டுள்ளோம்.
டிஜிட்டல் கைது குறித்து, சினிமா தியேட்டர்கள் மற்றும் ரேடியோ வாயிலாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், மாநிலம் முழுதும், 1930 என்ற எண் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, சைபர் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு துாதுவர்களாக, 15,000 ஆட்டோ ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, சைபர் குற்றங்கள், அதில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது குறித்து, மக்களிடம் எடுத்துரைக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆட்டோக்களில், 1930 என்ற எண் 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?