news Breaking News
clock

செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் 2வது வார பயிற்சி வகுப்பு:

செய்யாறில் திருக்குறள் திருப்பணிகள் 2வது வார பயிற்சி வகுப்பு:



செய்யாறு அக். 19,


செய்யாறில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இரண்டாவது வார திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவது வார திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு பயிற்றுநர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கினார். பயிற்றுநர் புலவர் ந. கனக சபை முன்னிலை வகித்து பயிற்சியை துவக்கி வைத்தார்.


சிறப்பு அழைப்பாளர்களாக தலைமை ஆசிரியர் ஆர் .தேன்மொழி, தமிழாசிரியர்கள் ஏ .ஆனந்தி, எஸ். ராஜலட்சுமி, ஆகியோர் மாணவிகளுக்கு திருக்குறள் சார்ந்த கருத்துக்களை கூறினர்.


நேற்றைய பயிற்சியில் 49 மாணவர், மாணவியர் கலந்து கொண்டனர். திருக்குறள் மனனம் செய்ய மாணவர்கள் அவர்கள் தம் விருப்பம் போல் செயல்பட ஆர்வமூட்டப்பட்டது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News