சென்னை புறநகரில் புதைவட மின் கம்பி பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

சென்னை புறநகரில் புதைவட மின் கம்பி பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தல்

சென்னை:

சென்னை புறநகர் பகு​தி​களில் உயர் மின் கம்​பங்​களை புதைவட மின் கம்​பிகளாக மாற்​றும் பணி​களை துரிதப்படுத்த வேண்​டும் என பொது​மக்​கள் வலி​யுறுத்தி வரு​கின்​றனர். நுகர்​வோருக்கு மின்​சா​ரம் விநி​யோகிக்க உயர​மான கம்பங்​களில் மின் கம்​பிகள் பொருத்தி அதன் வழி​யாக மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.


ஆனால் நகர பகு​தி​களில் அதி​கப்​படி​யான நெரிசல், உயர்ந்த கட்​டிடங்​கள் உள்​ள​தால் பாது​காப்பை கருத்​தில் கொண்டு அங்கே மின் கம்​பங்​கள் அகற்​றப்​பட்டு புதைவட மின் கம்​பிகள் பொருத்​தப்​பட்​டன. ஆனால் கிராமப்​புற, புறநகர் பகு​தி​களில் உயர் கம்பங்களில் மின் கம்​பிகள் வாயி​லாகவே மின்​சா​ரம் கொண்டு செல்​லப்​படு​கிறது.


இந்நிலை​யில் சென்னை நகரை சுற்​றி​யுள்ள புற்​நகர் பகு​தி​களான பெரும்​பாக்​கம், புழல், வேளச்​சேரி, மடிப்​பாக்​கம், தாம்​பரம் உள்ளிட்ட இடங்​களில் மக்​கள் தொகை பெருக்​கம் மற்​றும் தொழில் வளர்ச்​சி​யால், இந்த பகு​தி​களில் உள்ள உயர் மின் கம்​பங்​கள் புதைவட மின் கம்​பிகளாக மாற்ற முடிவு செய்​யப்​பட்​டது.


விரைவில் புதிய டெண்டர் ஆனால் அதற்​கான பணி​கள் மந்த நிலை​யில் நடப்​ப​தாக குற்​றஞ்​சாட்​டும் மக்​கள், பணி​களை விரைவுப்​படுத்த வேண்​டும் என வலி​யுறுத்தி வரு​கின்​றனர். அண்​மை​யில் தாம்​பரத்​தில் மின் கம்​பம் அருகே சென்ற இளைஞர் ஒரு​வர் மின்​சா​ரம் பாய்ந்து உயி​ரிழந்தை தொடர்ந்து இந்த பணி​களை விரைந்து முடிக்க கோரிக்கை வலுத்​துள்​ளது.


இதுகுறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: உலக வங்​கி​யின் நிதி​யில் செயல்​படுத்​தப்​படும் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்​டத்​தின் கீழ் சென்​னை, கடலூர், நாகப்​பட்​டினத்​தில் பொது​மக்​களின் பாது​காப்பை உறுதி செய்ய தாழ்​வழுத்த பிரிவில் 33,307 கி.மீ. உயரழுத்த பிரி​வில் 2004 கி.மீ. மின் கம்​பிகள் உயர் மின் கம்​பங்​களில் இருந்து புதைவட மின் கம்​பிகளாக மாற்​றப்​படு​கின்​றன.


இதில் 40 சதவீத பணி​கள் நிறைவு​பெற்​றுள்​ளன. உயரழுத்த பிரி​வில் பணி​கள் முழு​மைய​மாக முடிந்​துள்​ளன. தாம்​பரம், பெரம்​பூர், ஆவடி ஆகிய பகு​தி​களில் ஒரு சில பிரிவு​களில் பணி​கள் முடிக்​கப்​பட்​டுள்​ளன. தென் சென்னை மற்​றும் சென்னை புறநகரில் ஒரு சில பிரிவு​களில் பணி​கள் முடிக்​கப்​பட​வில்​லை. இந்த பணி​களுக்கு வழங்​கப்​பட்ட டெண்​டர் நிர்​வாக காரணங்​களுக்​காக ரத்து செய்​யப்​பட்​டது. விரை​வில் டெண்​டர் கோரப்​பட்டு பணி​கள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று அவர்​கள்​ கூறினர்​.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%