செண்பகத்தோப்பு அணையில் தண்ணீர் திறப்பு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Oct 09 2025
40
திருவண்ணாமலை, அக். 6- செண்பகத்தோப்பு அணியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணையின் மொத்த உயரம் 62.32 அடி யாகும். அதில் தற்போது 57.33 அடி (82.18 விழுக்காடு) நீர் இருப்பு உள்ளது. தற்போது செண்பகத்தோப்பு அணைக்கு வினாடிக்கு 260 கன அடி வீதம் நீர் வரத்து வருகிறது. இம் மாதம் அதிக மழை பொழிவு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, செண்ப கத்தோப்பு அணையின் நீர் மட்டம் 57 அடியை (82 விழுக்காடு) அடையும்போது செண்பகத் தோப்பு அணையின் வெள்ள உபரி நீர் வெளியேற்றும் ஒழுங்குமுறை வழிகாட்டுத லின்படி, செண்பகத்தோப்பு அணைக்கு வரும் உபரி நீரை வினாடிக்கு 150 கன அடி வீதம் கமண்டலாற்றில் திங்கட்கிழமை (அக்.6) மாலை வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் கமண்டல ஆறு மற்றும் கமண்டல நாகநதி கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேற்றம் குறித்த விவரம் கரை யோர மக்கள் மற்றும் போளூர், ஆரணி, செய்யார், ஆற்காடு மற்றும் வெம்பாக்கம் வட்டாட்சியர்களுக்கும் தகவல் அளிக்கப் பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எச்சரிக் கையுடன் இருக்க மாவட்ட ஆட்சியர் அறி வுறுத்தியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?