செங்கம் முத்தமிழ் மன்றம் சார்பில் கவிதை நூல்கள் அறிமுக விழா
Jul 08 2025
24

செங்கம் முத்தமிழ் மன்றம் சார்பில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் முனைவர் பூமிநாதனின் இரு கவிதை நூல்கள் அறிமுக விழா நடைபெற்றது. விழாவுக்கு முத்தமிழ் மன்ற தலைவர் ராம ராகவன் தலைமை தாங்கினார். நூல் ஆசிரியரை அறிமுகப்படுத்தி முதுகலை ஆசிரியர் சாம்ராஜ் பேசினார்.
ஆதித்தாயின் முதுகில் கேட்கும் துடிப்பு என்ற நூலினை அறிமுகப்படுத்தி செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் கவிஞர் கவியரசன் பேசினார். மகரந்தம் சுமக்கும் அட்டைகள் என்ற நூலினை அறிமுகப்படுத்தி காரப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை ஆசிரியர் கவிஞர் தமிழ்மதி பேசினார்.
முடிவில் மன்ற உறுப்பினர் சேகர் நன்றி உரையாற்றினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?