சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலை

சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலை


 

சூலூா்: சூலூா் அருகே சாலையோரம் கிடந்த அம்மன் சிலையை அதிகாரிகள் மீட்டனா்.


சூலூா் அருகேயுள்ள அயோத்தியாபுரத்தில் அம்மன் சிலை ஒன்று சாலையோரத்தில் புதன்கிழமை இரவு கிடந்துள்ளது.


இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் சிலை எடுத்துவைத்து அங்கேயே வழிபாடு நடத்த முயற்சி செய்தனா்.


தகவல் அறிந்த சூலூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து, சிலையை மீட்க முயன்றனா். அப்போது, அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.


இதையடுத்து, போலீஸாா் உதவியுடன் சிலையை மீட்ட அதிகாரிகள், பாப்பம்பட்டி கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.


சிலையை மா்ம நபா்கள் வீசிச் சென்றனரா அல்லது பழங்கால சிலையா என்பது குறித்து அதிகாரிகள், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%