சூரிய மின்சக்தி திட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா உ.பி. முன்னிலை
Feb 18 2026
23
புதுடெல்லி: பிரதமரின் சூர்ய இல்லம்: இலவச மின்சார திட்டத்தை மத்திய அரசு கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் வீடுகளின் கூரைகளில் சூரியசக்தித் தகடுகளை அமைப்பதன் மூலம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாகும்.
ரூ.75,021 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், மார்ச் 2027-க்குள் ஒரு கோடி வீடுகளில் சோலார் அமைப்புகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசு ஒரு வீட்டுக்கு ரூ.78,000 வரை ஒருமுறை நிதியுதவி வழங்குகிறது, இந்த திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 8,691 மெகாவாட் திறன் கொண்ட 23 லட்சத்துக்கும் அதிகமான ரூஃப்டாப் சோலார் அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இதற்காக அரசு ரூ.16,932.4 கோடி மானியம் வழங்கி உள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டதில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. குஜராத் 5.6 லட்சத்துடன் முதலிடத்திலும், மகாராஷ்டிரா (4.5 லட்சம்) 2-ம் இடத்திலும் உத்தரபிரதேசம் (3.7 லட்சம்) 3-ம் இடத்திலும் உள்ளன.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?