சீர்காழியில் ஜூனியர் சேம்பர் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா
சீர்காழி , டிச, 25 -
ஜூனியர் சேம்பர் இந்திய அமைப்பின் கிளை அமைப்பான சீர்காழி கிரீன் சிட்டி அமைப்பின் புதிய பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தென்பாதி ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
ஜூனியர் சேம்பர் இந்தியா அமைப்பின் மண்டல தலைவர் விக்னேஷ், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் , ஊடகவியலாளர் கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தமிழ் சங்க தலைவர் ஜெனிஃபர் பவுல்ராஜ் , மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்தர் ,விஜய் டிவி புகழ் சரவெடி சரவணன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் தலைவராக கவிஞர் கவிமோகன், செயலாளர் சக்தி பாலன், பொருளாளர் சடகோபன் ஆகியோர் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
சீர்காழியில்நடைபெற்ற ஜூனியர் சேம்பர் இந்தியா என்கிற உலகளாவிய அமைப்பின் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழாவில் பல்வேறு தரப்பினருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தொடர்ந்து சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ், அரசு மருத்துவர் யஷ்வந்த் ஜெயின் , தனக்கீர்த்தி, ஆசிரியர் துரைராஜ் சமூக சேவகர் பாரதிமோகன் இளம் தொழில் முனைவர் அருள் அசுபதி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?