news Breaking News
clock

சீர்காழியில் சார் பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் திறப்பு விழா

சீர்காழியில் சார் பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் திறப்பு விழா



சீர்காழி , பிப் , 14 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பத்திர பதிவு அலுவலகம் (சார் பதிவாளர் அலுவலகம் ) புதிய கட்டிட திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சீர்காழி தொகுதி ரியல் எஸ்டேட் செய்வோர் நல சங்கம் மற்றும் சீர்காழி தாலுக்கா வியாபாரிகள் சங்கம் சார்பாக திரளானவர்கள் கலந்து கொண்டனர். சார்பதிவாளர் அனிதா மற்றும் ஊழியர்களுக்கு ரியல் எஸ்டேட் சங்கத்தின் சார்பாக இனிப்புகளும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது. சீர்காழி தாலுக்கா வியாபாரிகள் சங்கம் சார்பாகவும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ரியல் எஸ்டேட் சங்க தலைவர் பொறியாளர் சுப்பிரமணியன், மாதிரவேலூர் பள்ளி செயலாளர் சரண்ராஜ், ரியல் எஸ்டேட் சங்க செயலாளர் கோவிந்தராஜன், பொருளாளர் ஃபெலிக்ஸ் ராஜ் , துணை தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, முத்துராமலிங்கம், சத்யநாராயணன், வெற்றிலை முருகன் இணைச் செயலாளர் குணசேகரன், பிரகாஷ் செம்மங்குடி குமார், கிளை செயலாளர் பாலாஜி , காமராஜர், சுந்தர், சட்ட ஆலோசகர் ராம.சிவசங்கர், மக்கள் தொடர்பு அலுவலர் தில்லை நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News