சீனாவில் கனமழை, நிலச்சரிவு: 4 பேர் பலி; 3 நாட்களுக்கு கடும் எச்சரிக்கை
Jul 30 2025
12

பீஜிங்,
சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், நிலச்சரிவு ஏற்பட்டு பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கின் மியுன் புறநகர் பகுதியில், 4,400-க்கும் மேற்பட்டோர் தொடர் மழை எதிரொலியாக, வேறு பகுதிகளுக்கு சென்று விட்டனர்.
கார்கள் மற்றும் லாரிகள் வெள்ள நீரில் மிதந்து வந்தன. குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கி விட்டன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மின் துண்டிப்பால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கனமழை, நிலச்சரிவால் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 பேரை காணவில்லை.
இந்த சூழலில், பீஜிங் மற்றும் 11 மாகாணங்களில் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு சீனாவில் இந்த கனமழை தொடரும் என கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சீனாவின் கிழக்கே ஷான்டாங் மாகாணத்தில் இந்த மாதத்தில் வெள்ளம் எதிரொலியாக 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காணாமல் போனார்கள். இதேபோன்று சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பல்வேறு கார்கள் மலை பகுதியில் அடித்து செல்லப்பட்டன. 5 பேர் உயிரிழந்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?