மழை வந்தால் என்ன செய்வாய்

மழை வந்தால் என்ன செய்வாய்


 மழையின் துளிகள் வரிசையாய்ப் 

பள்ளி செல்வதை உணர்த்துதே 

பாப்பா பார்க்கும் போது நீராய் ஓடத் தொடங்குது 


இடியின் ஓசை கேட்டாலே இருகாதுகளைக் கைப் பொத்துமே 

உடலில் நடுக்கம் வந்திடும் வாயோ அர்ஜுனா என்றிடும்

 

மின்னல் வரும் முன்னாடி தன்னால் மலரும் விழிகளே

வின்நீரில் நனைய விரும்புதே

தேன்துளி போல இனிக்குதே


காகிதத்தில் கப்பல் செய்து

ஆனந்தத்தில் துள்ளிக் குதித்துக்

காலாற நடந்தே களித்திருப்போமே

கத்திக் கப்பல் மட்டும் தனியாய்த் தெரியுமே


நனைதல் நனைதல் விருப்பமே

நனைந்தால் உடலுக்குத்

தீமையே

எல்லாம் கொஞ்ச 

நேரந்தான்

இன்பமும் துன்பமும் 

அதுபோல்தான்


Bhanumati Nachiyar

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%