சிவலிங்கம் நிறுவும் பணி: முதல்வர் நிதிஷ் குமார் ஆய்வு

சிவலிங்கம் நிறுவும் பணி: முதல்வர் நிதிஷ் குமார் ஆய்வு


 

பாட்னா: பிஹாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டம் கல்யாண்பூர் அருகில் புதிதாக விராட் ராமாயணக் கோயில் கட்டப்படுகிறது. இங்கு 33 அடி உயர பிரம்மாண்ட சிவலிங்கம் நிறுவும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பார்வையிட்டார்.


பிறகு கோயில் வளாகத்தை பார்வையிட்ட நிதிஷ் குமார் அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் ஒரே பாறையில் செதுக்கப்பட்ட இந்த சிவலிங்கம் 210 மெட்ரிக் டன் எடை கொண்டது. இது பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 96 சக்கரங்கள் கொண்ட டிரெய்லர் மூலம் கல்யாண்பூருக்கு கொண்டுவரப்பட்டது. பிஹார் மாநில மத அறக்கட்டளை குழுவின் (பிஎஸ்ஆர்டிசி) உறுப்பினர் சயன் குனால் மற்றும் பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.




குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட அனுமதி இல்லை

 

புதுடெல்லி: வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பு ‘கர்த்தவ்ய பாதையில்' நடைபெற உள்ளது.


இதுகுறித்து குடியரசுத் தலை​வரின் செயல​கம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், ‘‘குடியரசு தின அணிவகுப்பு மற்​றும் பாசறைக்கு திரும்​புதல் விழாக்​கள் காரணமாக ஜனவரி 21 முதல் 29 வரை குடியரசுத் தலை​வர் மாளி​கை​யை (சர்க்​யூட்​-1) பார்​வை​யிட பொதுமக்​களுக்கு அனு​மதி இல்​லை’’ என கூறப்​பட்​டுள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%