அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மோதலால் சீனா, ரஷியாவுக்கு பயன்!

அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் மோதலால் சீனா, ரஷியாவுக்கு பயன்!


 

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான அமெரிக்காவின் மோதலால் சீனா மற்றும் ரஷியா நாடுகள் பயனடைவதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கூறியுள்ளார்.


அமெரிக்காவின் வரிவிதிப்பையடுத்து, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், “நட்பு நாடுகளிடையே (ஐரோப்பிய ஒன்றியம் - அமெரிக்கா) பிளவு ஏற்படுவதால், சீனாவும் ரஷியாவும்தான் பயனடைகிறார்கள்.


கிரீன்லாந்தின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், நேட்டோவால்தான் இதனை நாம் தீர்க்க முடியும்.


வரிவிதிப்பால், ஐரோப்பாவும் அமெரிக்காவும் ஏழ்மையான நாடுகளாக மாற்றும் அபாயம் ஏற்படுகிறது. இதனால், நமது பகிரப்பட்ட செழிப்பு குறைமதிப்புக்கு உள்படுத்தப்படுகின்றன.


உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் எங்கள் முயற்சியை திசைதிருப்புவதை அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கோல்டன் டோம் பாதுகாப்பு அமைப்புக்கு கிரீன்லாந்து முக்கியமானது என்று டிரம்ப் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இருப்பினும், கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தொடர்ந்து எதிர்ப்புதான் தெரிவித்து வருகிறது.


இந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மீது 10 சதவிகித வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்து உத்தரவிட்டார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%